இன்று உலக எமோஜி நாள். உங்களுக்குப் பிடித்த எமோஜி எது?
எனக்குப் பிடித்தது பழைய Yahoo Messengerல் இருந்த “Smug” என்ற எமோஜி. “:>” என்ற எழுத்துகளைச் சேர்த்தால் வரும். மிக அழகான, குறும்பான, தனக்கென்று ஓர் ஆளுமையைக் கொண்டிருப்பதாகத் தோன்றக்கூடிய எமோஜி. இதை நான் ஆயிரக்கணக்கானமுறை பயன்படுத்தியிருப்பேன். குறிப்பாக, பா. ராகவனும் நானும் நெடுநேரம் ஒரு சொல்கூடப் பேசாமல் மாற்றி மாற்றி :> போட்டு விளையாடிக்கொண்டிருப்போம். ஆனால், இப்போது நாங்கள் யாஹூ மெசஞ்சர் பயன்படுத்துவதில்லை, இந்த எமோஜியும் வழக்கத்தில் இல்லை.
நீங்கள் இந்த எமோஜியைப் பார்த்ததில்லை என்றால், இந்த இணைப்பைக் கிளிக் செய்து பாருங்கள். ஆனால் அங்கிருப்பது மிகச் சிறிய படம் என்பதால் இந்த எமோஜி ஏன் எனக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என்பதை உங்களால் சிறிதும் புரிந்துகொள்ள இயலாது.
பரவாயில்லை, உங்களுடைய விருப்பமான எமோஜியைக் கமெண்ட்ஸில் குறிப்பிடுங்கள்.