Tamil Linux Community யூட்யூப் சானலில் என்னுடைய விரிவான பேட்டியொன்று வெளியாகியுள்ளது. என்னுடைய தனிப்பட்ட அனுபவக் குறிப்புகளுடன், மக்களிடையில் படிப்பு ஆர்வத்தை உண்டாக்க நாம் என்ன செய்யவேண்டும், தமிழில் தொழில்நுட்ப நூல்கள் மிகுதியாக வராதது ஏன், செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பம் எழுத்தாளர்களை என்ன செய்யும், இளைய தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்கள் பணிவாழ்க்கையைத் (Career) திட்டமிடுவது எப்படி, புதிதாக நூல் எழுத வருவோர் அதற்கான மனநிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி என்றெல்லாம் விளக்கமாகப் பேசியிருக்கிறேன். மிகவும் மனநிறைவை அளித்த பேட்டி.
பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.