மொழிபெயர்ப்பை ஒரு முழு நேர அல்லது பகுதி நேரத் தொழிலாகக் கொண்டு இயங்க விரும்புவோருக்கான வகுப்பு இது.
இதை நடத்துபவர் என். சொக்கன். எழுத்துத் துறையில் 25+ ஆண்டு அனுபவமும், மொழிபெயர்ப்புத் துறையில் 10+ ஆண்டு அனுபவமும் கொண்டவர். 70+ நூல்களை எழுதியுள்ளவர். நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் மொழிபெயர்ப்புத் தொழிலைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவருபவர். பல துறைகளில் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளவர்.
எளிய தமிழில் சிக்கலில்லாத சொற்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் இந்த வகுப்பில் தமிழ், ஆங்கிலம் (அல்லது வேறொரு மொழி) தெரிந்த யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். ஏற்கெனவே மொழிபெயர்த்துள்ளவர்கள், புதிதாக மொழிபெயர்க்கிறவர்கள் என அனைவருக்கும் இது பயன்படும். அவர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்புத் தொழிலை அமைத்து நடத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதலை இது வழங்கும்.
இந்த வகுப்பின் சுருக்கமான பாடத்திட்டம்:
- மொழிபெயர்ப்பு என்பது உண்மையில் என்ன?
- மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேவையான திறமைகள் என்னென்ன?
- மொழிபெயர்ப்பைத் தொழிலாகக் கொண்டு இயங்க இயலுமா? அதற்கான இன்றைய வாய்ப்புகள் என்னென்ன? இதன்மூலம் எவ்வளவு பணம் எதிர்பார்க்கலாம்?
- அவ்வாறு மொழிபெயர்ப்பைத் தொழிலாகச் செய்ய நான் தயாராவது எப்படி? (Preparation)
- என்னைப் பிறருக்குத் தெரியப்படுத்துவது எப்படி? (Visibility)
- என் பணிக்குக் கட்டணத்தைத் தீர்மானிப்பது எப்படி? (Pricing)
- இந்தத் துறையில் போட்டி எந்த அளவுக்கு இருக்கும்? அதைச் சமாளிப்பது எப்படி? (Competition)
- என்னென்ன துறைகளில் மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் வரும்? அந்தத் துறை சார்ந்த அறிவைப் பெறுவது எப்படி? (Domain Expertise)
- மொழிபெயர்ப்புக் கருவிகள் (Tools)
- முதல் வாய்ப்பைப் பெறுவது எப்படி? அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவது எப்படி?
- என் மொழிபெயர்ப்புத் தரத்தை உறுதிசெய்வது எப்படி?
- பண விஷயத்தில் ஏமாறாமல் இருப்பது எப்படி?
- சொன்ன நேரத்துக்குப் பணியை முடித்துக் கொடுக்க நான் பின்பற்றவேண்டிய ஒழுக்கங்கள் என்னென்ன?
- பணியை முடித்தபின் நான் என்னென்ன செய்யவேண்டும்?
- வாடிக்கையாளர் சொல்லும் கருத்துகள், விமர்சனங்களைக் கையாள்வது எப்படி?
- தானியங்கி மொழிபெயர்ப்புகள் (Automated Translation) என் தொழிலைப் பாதிக்குமா?
- வெளிநாட்டு வாடிக்கையாளர்களைப் பெறுவது எப்படி? அதில் வரக்கூடிய சிக்கல்கள் (வெளிநாட்டு நாணயப் பயன்பாடு, வரி போன்றவை).
- நான் வேறு வேலை பார்த்துக்கொண்டு மொழிபெயர்ப்பைச் செய்தால் அதற்கு என் நிறுவனத்திடம் அனுமதி பெறவேண்டுமா?
- மொழிபெயர்ப்பைத் தொண்டாகச் செய்தல். (Pro Bono Translation)
- மொழிபெயர்ப்பில் நாம் எவ்வளவு சுதந்தரம் எடுத்துக்கொள்ளலாம்.
- மொழிபெயர்ப்பதன்மூலம் நாம் சமூகத்துக்குக் கொடுக்கும் கொடை என்ன?
- தொடர்ந்து மேம்படுதல் (Sharpen the Axe)
- கேள்வி, பதில்
வகுப்பு 3 மணி நேரம் நடைபெறும். கூகுள் மீட்மூலம் பங்கேற்கலாம்.
நாள்: அக்டோபர் 22
நேரம்: இந்திய நேரம் மாலை 6:30லிருந்து 9:45வரை (நடுவில் 15 நிமிட இடைவேளை)
வகுப்புக்கான கட்டணம்: ரூ 1000
கட்டணம் செலுத்தும் முறைகள்:
இந்தியாவில் உள்ளவர்கள்:
- கீழுள்ள QR Code பயன்படுத்திப் பணம் செலுத்தலாம் (அல்லது)
- 8050949676 என்ற எண்ணுக்கு Google Pay செய்யலாம் (அல்லது)
- இங்கு கிளிக் செய்து கிரெடிட் கார்ட்/டெபிட் கார்டில் பணம் செலுத்தலாம்
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றிப் பணம் செலுத்துங்கள். அதன்பிறகு, நீங்கள் பணம் செலுத்திய Screenshotஐ 8050949676 என்ற எண்ணுக்கு வாட்ஸாப்மூலம் அனுப்பிவையுங்கள். உங்கள் இடம் உறுதிப்படுத்தப்படும்.
வெளிநாட்டில் உள்ளவர்கள்:
umadharani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு PayPalல் 14$ (பரிமாற்றக் கட்டணம் உள்பட) செலுத்திவிட்டு, 8050949676 என்ற எண்ணுக்கு வாட்ஸாப்மூலம் ஸ்க்ரீன்ஷாட் அனுப்பிவையுங்கள். உங்கள் இடம் உறுதிப்படுத்தப்படும்.
இந்த வகுப்பில் அதிகபட்சம் 30 பேருக்குதான் அனுமதி. அதனால், தேவை உள்ளவர்கள் உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
வாருங்கள். கற்றுக்கொள்வோம், தரமாக மொழிபெயர்ப்போம், நமக்கு உரிய அங்கீகாரத்தையும் பொருளாதார நலனையும் பெறுவோம்.