“தொழில்முனைவோர்கள்” என்று பலரும் எழுதுவதைப் பார்க்கிறேன். அதைத் “தொழில்முனைவோர்” என்று எழுதினால் போதும், அந்த ‘ஓர்’ விகுதி பன்மையை உணர்த்திவிடுகிறது, அதன்பிறகு இன்னொரு ‘கள்’ சேர்ப்பது தேவையில்லாத சுமை.
‘பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்’ என்று ஒரு பழைய பாட்டு கேட்டிருப்பீர்கள். ‘ஓர்’ விகுதியை நினைவில் வைத்துக்கொள்ள அந்தப் பாட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வேறு சில எடுத்துக்காட்டுகள்:
* தேர்தலில் போட்டியிட்டோர் நாற்பது பேர்
* விழாவுக்கு வந்தோர் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது
* நன்றாகப் படிப்போர் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்
* உடற்பயிற்சி செய்வோர் நாள்முழுக்கச் சுறுசுறுப்பாக உணர்வார்கள்
பின்குறிப்பு: ‘நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ என்று கண்ணதாசன் ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார் என நண்பர் இலவசக் கொத்தனார் சுட்டிக்காண்பித்தார். மெட்டுக்கு/சந்தத்துக்கு எழுதும்போது இதுபோன்ற சிறு மீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன, உரைநடையில் தேவையில்லை.
***
தொடர்புடைய புத்தகம்:
நல்ல தமிழில் எழுதுவோம்: எளிய முறையில் தமிழ் இலக்கணம் கற்க உதவும் மிகச் சிறந்த கையேடு
கிண்டில் நூல்: https://amzn.to/3J50JNK
அச்சு நூல்: https://amzn.to/3kulAjg