1
இணைப்புகளை(முக்கியமாக வீடியோ இணைப்புகளை)ப் பகிர்ந்துகொள்ளும்போது ஒரு வரி அறிமுகமேனும் எழுத மறவேல்
2
யாருக்கேனும் எதையேனும் அனுப்பிவிட்டுப் பத்தாவது விநாடியில் பதில் எதிர்பாரேல்
3
இரண்டு நாளாகியும் பதில் வராவிட்டால் ஏன் பதில் இல்லை என்று நினைவுபடுத்த மறவேல்
4
இரண்டு முறை நினைவுபடுத்தியபிறகும் பதில் வராவிட்டால், பதில் சொல்ல விருப்பமில்லை என்று புரிந்துகொண்டு சும்மா இருக்காமல் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்யேல்
5
காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கத்தாலெல்லாம் நல்லுறவு வளரும் என்றெண்ணேல்
6
குறிப்பாக, பூக்கள், இயற்கைக் காட்சிகளின் படம் போட்ட காலை வணக்கங்களை அனுப்புவதால் கடுப்புதான் வளரும் என்பதை மறவேல்
7
அப்துல் கலாம், ரூமி, சுந்தர் பிச்சை பொன்மொழிகளை யாருக்கும் அனுப்பேல்
8
பிறர் எழுத்துகளை வேறு எங்கேனும் காபி, பேஸ்ட் செய்யும்போது வேண்டுமென்றே, அல்லது தற்செயலாக அவர்கள் பெயரைச் சேர்க்க மறவேல்
9
ஆராயாமல் எதையும் ஃபார்வர்ட் செய்யேல்
10
இணையக் குழுக்களின் மைய நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அவற்றில் சேரேல்
10அ
அப்படிப் புரிந்துகொள்ளாமல் சேர்ந்துவிட்டாலும், அங்கு எதையெதையோ பதிவு செய்து படுத்தேல்
(தொடரலாம்)