படிகள் இருக்கிற ஒரு கட்டடத்தில் லிஃப்டும் இருந்தால் பெரும்பாலானோர் லிஃப்டைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ஓரிரு தளங்கள் செல்வதற்கு லிஃப்டைவிட நடப்பதுதான் (படி ஏறி இறங்குவதுதான்) வசதி, விரைவு, சிறு உடற்பயிற்சியும் கூட.
முக்கியமாக, நம் நேரம் நம் கட்டுப்பாட்டில் உள்ளது, இன்னோர் இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற உணர்வு ஏற்படும். அது மன நலத்துக்கு நல்லது.
அதனால், உடல்நிலை ஒத்துழைக்காதவர்களைத்தவிர மற்றவர்கள் “எப்போதும் லிஃப்ட்” என்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ள முயலலாம். முழுக்க மாறாவிட்டாலும், “50% லிஃப்ட், 50% படி ஏறி இறங்குதல்” என்று மாற்றினால்கூடத் தொலைநோக்கில் பெரிய நன்மை உண்டு.