எழுதுவது எப்படி, எழுத்தாளராவது எப்படி என்பதைப்பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. ஆனால், ஸ்டீஃபன் கிங் எழுதிய On Writing என்ற நூல் அவற்றையெல்லாம்விடச் சிறப்பாகத் தனித்துத் தெரியக் காரணம், வெறுமனே பாடம் நடத்தாமல் அதைத் தன்னுடைய வாழ்க்கையுடன் கலந்து அவர் சொல்கிற விதம்தான்.
கதைகளுக்குப் புகழ் பெற்ற கிங் இந்தப் புத்தகத்தில் ஓர் அட்டகாசமான கதையல்லாத எழுத்தாளராகவும் தன்னை நிறுவிக்கொண்டிருப்பார், படிக்கும்போதே ‘இவருடைய பேச்சைக் கேட்டால் நமக்கும் ஒழுங்காக எழுத வரும்’ என்கிற நம்பிக்கையை நமக்குள் கொண்டுவந்துவிடுவார்.