இன்றைய சுயமுன்னேற்ற நூல்களுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த Classic Self-Help நூல்களுள் ஒன்று, The 7 Habits of Highly Effective People. மிக எளிய, அதே நேரம் நேரடியாகப் பயன்படுத்தக்கூடியவகையில் அமைந்த இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே சில நூறு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன என்றால், இந்நூலின் தாக்கத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
31 ஆண்டுகளுக்குமுன் வெளியாகியிருந்தாலும், இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அடிப்படைகள் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக, First Things First (முக்கியமானவற்றை முதலில் செய்யுங்கள்), Think Win-Win (தொடர்புடைய அனைவரும் வெல்லவேண்டும் என்ற மனநிலையுடன் இருங்கள்) ஆகிய இரண்டும் என்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள்.
இன்று இந்த நூல் 70% தள்ளுபடியில் கிடைக்கிறது. கண்டிப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.