சில ஆண்டுகளுக்குமுன் என்னுடைய மகள்களைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் வழியில் அவர்களுக்கு நாள்தோறும் ஒரு திருக்குறளைச் சொல்லி எளிமையான விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தேன். சுமார் ஓராண்டில் இப்படி 200 குறள்களைப் பேசித் தெரிந்துகொண்டோம். அவற்றை முழுக்க ஒலிப்பதிவு செய்து யூட்யூபிலும் தொகுத்துவைத்துள்ளேன்.
உங்கள் குழந்தைகளுக்குத் திருக்குறள் கற்றுக்கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த ஒலிப்பதிவுகள் உங்களுக்கு உதவலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தக் குறள் விளக்கங்களைப் பார்க்க, இங்கு கிளிக் செய்யுங்கள்.