நங்கையின் வகுப்பில் ஓர் இரட்டையர்கள் உள்ளார்களாம். இருவரும் ஒரே வீட்டின் வெவ்வேறு அறைகளில் அமர்ந்து ஆன்லைன் பாடங்களைக் கவனிக்கிறார்களாம்.
இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது, ‘ஆன்லைன் வகுப்புகளால மத்த மாணவர்களுக்கெல்லாம் கிடைக்காத அரிய வாய்ப்பு அவங்களுக்குக் கிடைச்சிருக்கு, ரெண்டு பேரும் ஒரே ரூம்ல உட்கார்ந்து ஒண்ணாப் பாடத்தைக் கவனிக்கலாமே, இன்டர்நெட்டும் மிச்சமாகுமே’ என்றேன்.
‘ஆரம்பத்துல அவங்க அப்படித்தான் செஞ்சாங்கப்பா’ என்றாள் நங்கை, ‘ஆனா, மைக்ரோஃபோனை ம்யூட்கூடச் செய்யாம நாள்முழுக்க அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கற சண்டையைப் பார்த்து எங்க மேடமே அவங்களை வெவ்வேற ரூம்ல போய் உட்காரச்சொல்லிட்டாங்க.’