ஒரு வேலையைச் செய்யும்போது, ‘இதை ஒழுங்காகச் செய்துவிட்டால் இவர்களெல்லாம் பாராட்டுவார்கள்’ என்று ஊக்கமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.
அதைச் செய்ததும், அடுத்த விநாடி ‘ஏன் இன்னும் பாராட்டவில்லை?’ என்று ஏக்கமாகவும் சினமாகவும் இருக்கிறது.
அவர்கள் பாராட்டியதும், ‘அச்சச்சோ, இது ஒரு பெரிய விஷயமே இல்லையே, இதற்கு ஏன் பாராட்டுகிறார்கள்?’ என்று கூச்சமாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
ஆக, மனம் ஒரு குரங்கு.