இணையம் வழியாகச் சிறுவர்களுக்கு நிரலெழுதச் (Programing) சொல்லித்தருகிற Whitehat Jr என்ற புகழ்பெற்ற இணையத்தளத்தின் நிறுவனர், தலைவரான கரண் பஜாஜ்பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். பெரிய கல்வி நிறுவனங்களில் படித்திருக்கிறார், பெரிய நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார், அதன்பிறகு, இந்த நிறுவனத்தைச் சொந்தமாகத் தொடங்கி வளர்த்திருக்கிறார்.
ஆனால், கிட்டத்தட்ட இதேபோன்ற பின்னணி, வெற்றிக்கதையைக் கொண்ட மற்ற தொழில்முனைவோருடைய Resumeக்கும் இவருடைய Resumeக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது: ஒவ்வொருமுறை வேலை மாறும்போதும் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாவல் எழுதியிருக்கிறார், அவற்றைத் தன்னுடைய LinkedIn Profile பக்கத்தில் மற்ற தொழில்வாழ்க்கைக் குறிப்புகளுடன் சேர்த்தே குறிப்பிடுகிறார்.
கார்ப்பரேட் உலகில் வேலை செய்தபடி ஓய்வு நேரத்தில் எழுதுகிற (அல்லது, எழுத நேரமில்லை என்று புலம்புகிற) பலரை நாம் அறிவோம்; அவ்வப்போது வேலையை மொத்தமாக நிறுத்திவிட்டு, ஒரு நாவல் எழுதிவிட்டு, பின்னர் மீண்டும் வேலை செய்யத் திரும்புகிற இந்த விளையாட்டு கொஞ்சம் புதுமையாக இருக்கிறது!
இணைப்புகள்: