நேற்று எதேச்சையாகக் கூகுள் புக்ஸ் சென்றிருந்தேன். ‘நீங்கள் 100 ரூபாய்க்கு மேல் ஏதேனும் புத்தகம் (eBook) வாங்கினால் அதில் 100 ரூபாய் தள்ளுபடி’ என்று அறிவித்தார்கள், பயன்படுத்திக்கொண்டேன்.
ஆனால், இதைப்பற்றி நண்பர்களுக்குச் சொல்லலாம் என்று தேடியபோது, இணையத்தில் இந்தச் சலுகையைப்பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது, இது பொதுவில் அறிவிக்கப்படாத சலுகை என்று தெரிந்துகொண்டேன். அதாவது, நெடுநாட்களுக்குப்பிறகு கூகுள் புக்ஸ் பக்கத்தைத் திறக்கிறவர்களுக்குமட்டும் ஓர் ஊக்கத்தொகையாக இந்தச் சலுகையை வழங்குகிறார்கள்போல.
எதற்கும் கூகுள் ப்ளே செயலிக்குச் சென்று “Books” என்ற இணைப்பைத் தட்டிப் பாருங்கள், நூறு ரூபாய் கிடைக்கலாம்.