இன்று மதிய நடையின்போது கவனித்த ஒரு விஷயம், அநேகமாக மூன்று வீட்டுக்கு ஒரு வீட்டு வாசலில் ஓர் Asian Paints வாளி இருக்கிறது. நன்கு கெட்டியான பிளாஸ்டிக் வாளி என்பதால் அதை யாரும் தூக்கி எறிவதில்லை, தண்ணீர் ஊற்றி வைக்க, குப்பைத்தொட்டியாக, செடி வளர்க்க என்று ஏதாவது ஒரு வெளிப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்கிறார்கள்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம், அந்த வாளியின்மீது இருக்கும் Asian Paints சின்னம் அத்தனை எளிதில் அழிவதில்லை, பல மாதங்களுக்கு அந்நிறுவனத்தை ஊர்முழுக்க விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கென்றே அந்த நிறுவனம் தன்னுடைய வாளிகளைக் கூடுதல் உறுதியுடன், தடிமனான சுவர்களுடன், நெடுநாள் நீடித்து உழைக்கும்வகையில் தயாரிக்கிறது என்று நினைக்கிறேன், விற்கும்வரை பொருளுக்குப் பாதுகாப்பு, விற்றபின் இலவச விளம்பரம்!
பெயின்ட்டை வெற்று டப்பாக்களில் அடைக்காமல் கைப்பிடி வைத்த கெட்டியான வாளிகளில் அடைத்து விற்கலாம் என்று யோசித்த முதல் நபர் எவரோ, அவர் கண்டிப்பாக மிகப் பெரிய அறிவாளிதான்!