மிங்குகள்

நேற்று அலுவலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் இப்போது செய்துகொண்டிருக்கிற ஒரு பெரிய திட்டத்தைப்பற்றிப் பேச்சு வந்தது. ‘உங்கள் குழு எந்த நிலையில் இருக்கிறது? Forming, Storming, Norming, Performing or Outperforming? என்று கேட்டார் அவர்.

Image by Gerd Altmann from Pixabay

வரிசையாக மிங், மிங், மிங் என்று பழங்காலச் சீன அரசர்களைப் பட்டியலிடுவதுபோல் அவர் கேட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, காதுக்கு இனிமையாகவும் இருந்தது. பின்னர் அதைப்பற்றி கூகுள் செய்து தெரிந்துகொண்டேன்:

  • Forming: குழு இப்போதுதான் உருவாகியிருக்கிறது. ஆட்கள் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். தொடக்க நிலை.
  • Storming: குழுவில் எல்லாரும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டு சூழலை, குழுவின் நோக்கத்தைப் புரிந்துகொள்கிறார்கள்
  • Norming: குழுவில் எல்லாரும் இயல்பாகச் சேர்ந்து பணியாற்றிப் பல்வேறு விஷயங்களை எதிர்பார்த்தபடி செய்கிறார்கள்
  • Performing: குழுவில் எல்லாரும் சிறப்பாகத் திட்டமிட்டுப் பணியாற்றுகிறார்கள், பிழைகளைக் கண்டறிந்து திருத்திக்கொண்டு, ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு முன்னேறுகிறார்கள்
  • Outperforming: குழு மற்ற குழுக்களையெல்லாம் வெல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறது

நல்ல வகைப்படுத்தல். இந்த வரிசை தனிப்பட்ட உறவுகளுக்குக்கூடப் பொருந்தும் என்று நினைக்கிறேன்!

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *