இன்று மாலைத் தீனி பெங்களூரின் மிகப் பழைய உணவகங்களில் ஒன்றான (வயது: 97) மகாலட்சுமி டிஃபன் ரூமில்.
மதியம் இரண்டரைக்குதான் கடை திறக்கிறார்கள். அதற்குமுன்னாலிருந்து மக்கள் வரிசையில் காத்திருந்து கதவு திறந்ததும் திபுதிபுவென்று உள்நுழைகிறார்கள், அனைத்து மேசைகளையும் நிரப்பிவிடுகிறார்கள்.
சரி போ என்று வேறு பக்கம் சுற்றிவிட்டு மூன்று மணிக்குத் திரும்பினாலும் அதே அளவு கூட்டம், இடம் இல்லை. பின்னர் ஒருவழியாக மூன்றரைக்கு மூன்றாவது முயற்சியில் இடம் கிடைத்துச் சாப்பிட்டேன்.
அத்தனைப் போராட்டத்துக்கு இது வொர்த்தா என்றால், “ஆம்” என்பேன். அளவில் சிறிய, அந்தக் கால வடிவமைப்பு கொண்ட உணவகம், நெருக்கமாகப் பொருத்தப்பட்ட சிறிய மேசை, நாற்காலிகள், உட்கார்ந்ததும் சற்று உடம்பைக் குறுக்கிக்கொண்டு பணிவோடுதான் சாப்பிடவேண்டும். மசால் தோசை மிக நன்று (ஆனால் சற்றுத் தொலைவிலுள்ள வித்யார்த்தி பவன் மசால் தோசையைவிட ஒரு மாற்று குறைவுதான்!), காஃபி நன்று, வீட்டுக்குப் பார்சல் வாங்கி வந்த கேரட் அல்வாவும் நன்று. அதனால்தான் ‘No PayTM, No Credit Card, No Debit Card, Only Cash’ என்று முரண்டு பிடித்தாலும் மக்கள் இந்தக் கடையைத் தேடி வந்து சாப்பிடுகிறார்கள்போல.
கூட்டம் இல்லாத ஒரு வார நாளில் முயன்றுபாருங்கள், இந்தக் கடைக்கான கூகுள் மேப்ஸ் இணைப்புக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.