சிறு வயதில் மிகுந்த வறுமையில் வாழ்ந்தவர் சார்லி சாப்ளின். போதுமான உணவோ ஊட்டச்சத்துகளோ கிடைக்காததால் அவருடைய வளர்ச்சியே கடுமையாகப் பாதிக்கப்பட்டது, பல நோய்கள் அவரைத் தாக்கின.
இதனால், சார்லி பல நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கவேண்டியிருந்தது. எங்கும் செல்ல இயலாது, யாரையும் பார்க்க இயலாது, விளையாட இயலாது, சும்மா இருக்கவேண்டியதுதான்.
சார்லியின் தாய் ஹென்னா ஒரு மேடைக் கலைஞர். ஆகவே, நோய்வாய்ப்பட்டிருக்கிற மகனுக்குப் பொழுதுபோகவேண்டும் என்பதற்காக அவரே ஒரு நெட்ஃப்ளிக்ஸைப்போலவும் அமேசான் ப்ரைமைப்போலவும் மாறினார். பைபிள், கதைப் புத்தகங்களையெல்லாம் சார்லிக்குச் சுவையாக வாசித்துக்காண்பித்தார், வெவ்வேறு பாத்திரங்களை இவரே வெவ்வேறுவிதமாக நடித்துக்காண்பித்தார், குரலில் ஏற்ற இறக்கங்களாலும், விதவிதமான முகபாவங்களாலும் அந்தப் பாத்திரங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்திச் சுவையைக் கூட்டினார். சார்லிக்குள் கலையுணர்வைத் தூண்டிய முதல் கலைப் படைப்புகள் இந்த ஒரு நபர் நாடகங்கள்தாம்!
(என்னுடைய ‘சார்லி சாப்ளின் கதை‘ நூலிலிருந்து. இந்நூலை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.)
1 Comment