வாழ்க்கையை மாற்றிய அறிவுரைகள்

பெரிய வெற்றியாளர்கள் என்று நாம் வியந்து பார்க்கிற எல்லாருக்கும் ஒரு தொடக்கம் இருந்திருக்கும். ‘நல்ல நேரம், நல்ல வாய்ப்பு எப்போது வருமோ’ என்று அவர்கள் திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள். அந்த நேரத்தில், யாராவது ஒருவர் அவர்களுக்கு ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லியிருப்பார், அல்லது, செயலின்மூலம் உணர்த்தியிருப்பார். அந்த அறிவுரையைப் பற்றிக்கொண்டு அவர்கள் மேலே வந்திருப்பார்கள்.

ஒரே ஓர் அறிவுரையால் வாழ்க்கை மாறிவிடுமா என்றால், இல்லைதான். ஆனால், அது ஒரு பொறியைப்போல் செயல்பட்டுப் பெரிய மாற்றத்தைத் தொடங்கிவைத்திருக்கும். அப்படிப் பல வெற்றியாளர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் பெற்ற மிகச் சிறந்த அறிவுரைகளைத் தொகுத்து ‘The Best Advice I Ever Got’ என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளது ‘Business Today’ இதழ். அப்துல் கலாம், அஜிம் ப்ரேம்ஜி, கேப்டன் கோபிநாத், ஜாவேத் அக்தர், ஆமிர் கான், ஷாருக் கான், கிஷோர் பியானி, ஆனந்த் மகிந்திரா, வேணு ஶ்ரீனிவாசன், குர்சரண் தாஸ் உள்ளிட்ட பல துறை வல்லுனர்கள் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிய அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

The Best Advice I Ever Got by [The Business Today Team]

இந்த அறிவுரைகள் அனைத்தும் நீட்டி முழக்காமல் மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதால், இந்தப் புத்தகத்தை விறுவிறுவென்று வாசித்துவிடலாம். அவர்களுக்குப் பயன்பட்ட அறிவுரைகளில் சில, நமக்கும் பயன்படக்கூடும்.

இந்தப் புத்தகத்தை வாங்குவதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.

அது சரி, நீங்கள் பெற்ற மிகச் சிறந்த அறிவுரை என்ன? கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள், அவை எல்லாருக்கும் பயன்படும்.

About the author

என். சொக்கன்

View all posts

7 Comments

  • 1. யாகாவராயினும் நா காக்க.
    2. Do not worry too much about things which are not in your control, focus on the things which are in your control instead.

  • 1. Be content with what you have. Render help to the needy.
    2. The heights that great men gained and kept were not attained by sudden flight. But they, while their companions slept, were toiling upward through the night.

  • May look funny. But it is something made me to think deeply. There is a dialogue by Mr.Goundamani which I use to remember every now and then to reduce my anger, depression and other negative feelings about several insane behaviors of people/society around me . The dialogue is ” இந்த நாட்ல 80 கோடி பேர் இருக்கான். அவனை எல்லாம் திருத்துறது என் வேலை இல்லை. முடிஞ்சா என்ன திருத்திக்கிரேன் ” You cannot change people. If you start trying to change, it is an endless mission. Do not get negatively influenced by another human being around you. Accept the fact that majority is foolish and your job is not handling that. So, Focus on yourself. Great advice.. Isn’t it?

    • Absolutely. நம் தமிழ் சினிமாவில் போகிற போக்கில் இப்படி வந்து விழுந்த பயனுள்ள அறிவுரைகள் ஏராளம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *