‘எப்பவாச்சும் படிப்போம்’ என்ற எண்ணத்தில் ஈபுத்தகங்கள், வீடியோ இணைப்புகள், பாட்காஸ்ட்கள், இன்ஃபோகிராஃபிக்குகள், திரைப்படங்கள் என்று கண்டதையும் கணினியில், செல்ஃபோனில் சும்மா தொகுத்துவைக்கிற, பின்னர் அவற்றை எப்போதும் எடுத்துப் பயன்படுத்தாத பழக்கத்தை Digital Hoarding (டிஜிட்டல் பதுக்கல்) என்கிறார்கள். இது ஒருவருடைய வாழ்க்கையைப் பலவிதங்களில் பாதிக்கக்கூடிய ஓர் உளவியல் பிரச்சனை என்கிறார் Emanuel Maidenberg என்ற பேராசிரியர்.
‘இது மிக முக்கியமான கட்டுரை. அப்புறம் பொறுமையாகப் படிக்கலாம்’ என்று என்னுடைய To Read பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளேன், நீங்களும் சேர்த்துக்கொள்ளுங்கள்.