நாங்கள் வழக்கமாகச் செல்கிற தின்பண்டக் கடையில் ஒரு புதிய சேர்க்கை: வாசலில் ஒரு மிகப் பெரிய, அகலமான கடாய் வைத்துப் பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி விற்கிறார்கள். அத்துடன் பாதாம், பிஸ்தா, இன்னபிறவும் உண்டு.
‘எப்படிப் போகுது?’ என்றேன் கடைக்காரரிடம்.
‘பிரமாதம்’ என்றார். ‘மக்கள் நல்லா விரும்பிக் குடிக்கறாங்க. ரெண்டு மணிநேரத்துல மொத்தமும் தீர்ந்துடுது.’
கடாய் விரித்தால் கொள்வாருண்டு.