கடந்த சில ஆண்டுகளில் நான் எழுதிய தனிக் கட்டுரைகள் அனைத்தும் மூன்று நூல்களாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவை பல்வேறு இதழ்களில் எழுதப்பட்டவை என்பதால் ஒவ்வொன்றாக வாங்கிப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இப்போது மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.
1. தன்னம்பிக்கை/வாழ்வியல் கட்டுரைகள் அனைத்தும் “அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்…” என்ற தலைப்பில்
2. தொழில்நுட்பக் கட்டுரைகள் அனைத்தும் “தானா எழுதும் பேனா” என்ற தலைப்பில்
3. மற்ற பொதுக் கட்டுரைகள் அனைத்தும் “தூய்மை தொடங்கும் இடம்” என்ற தலைப்பில்
இந்த நூல்களைத் தொகுத்தபோது, கடந்த சில ஆண்டுகளைத் திரும்ப ஓட்டிப்பார்த்த ஓர் உணர்வு எனக்கு உண்டானது. பல முக்கியமான, பேசவேண்டிய விஷயங்களைத் தமிழில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன், புதிய உத்திகள் பலவற்றை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்ற மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைத்தது. இதற்கு வாய்ப்பளித்த இதழாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி!
மூன்று நூல்களும் ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியீடு. கீழுள்ள இணைப்புகளைக் கிளிக் செய்து வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
1. அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்…
#அறிவிப்பு #புதுநூல்கள் #நூல்வெளியீடு