இன்று தொடங்கி 102 நாட்களுக்கு, எனக்குப் பிடித்த 102 ஆளுமைகளைப்பற்றி, அவர்களிடம் நான் வியக்கிற, கற்றுக்கொள்கிற, கற்றுக்கொள்ள விரும்புகிற அம்சங்களைப்பற்றிச் சுருக்கமாக எழுதப்போகிறேன். இதில் புதியவர்கள், பழையவர்கள், மிகப் பழையவர்கள், மிக மிகப் பழையவர்கள், இந்தத் துறை, அந்தத் துறை என எல்லாரும் வருவார்கள். அனைவரும் நான் மதிக்கிற ஒன்றையாவது செய்திருப்பார்கள் என்பதுதான் அவர்களுக்குள் ஒற்றுமை. ஒவ்வொரு நாளும் ஓர் ஆளுமை, நூறு அல்லது அதைவிடக் குறைவான சொற்கள், அவ்வளவுதான். ஆர்வமுள்ளோர் அதற்குமேல் தேடித் தெரிந்துகொள்வார்கள்.
இந்தக் குறுந்தொடர் டெலகிராம் மொபைல் செயலியில் (Telegram Mobile App) வெளியாகும். படிக்க விரும்புவோர் இங்கு கிளிக் செய்து சேர்ந்துகொள்ளுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். (இந்தக் குழு இந்தத் தொடருக்குமட்டும்தான், 102 நாட்களுக்குப்பின் முடக்கப்பட்டுவிடும். அதுவரை குட் மார்னிங், குட் நைட், பூப்போட்ட வாழ்த்துச் செய்திகள், பொன்மொழிகளெல்லாம் வராது. துணிந்து சேர்ந்துகொள்ளலாம்.)
பின்குறிப்புகள்:
1. டெலகிராம் என்றால் என்ன என்று கேட்போருக்கு: வாட்ஸாப் காஃபி என்றால் டெலகிராம் டாஃபி. அவ்வளவுதான்.
2. ம்ஹூம், இந்தத் தொடருக்கென டெலகிராமுக்கெல்லாம் வரமுடியாது என்று சொல்வோருக்கு: பரவாயில்லை, பின்னர் நூலாக வெளிவந்தால் படித்துக்கொள்ளுங்கள்.
***
உயர்102 டெலகிராம் குழுவில் இணைய, இங்கு கிளிக் செய்யுங்கள்.