ஆச்சரியம் எதற்காக?

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு திடீர்ப் போட்டி அறிவித்திருந்தேன். கீழே உள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் ஏன் இப்படி ஆச்சர்யப்படுகிறான் என்று கற்பனை செய்யவேண்டும். 24 மணி நேரத்தில் சுமார் 120 நண்பர்கள் இதற்குப் பதில் எழுதிக் கலக்கிவிட்டார்கள்.

Photo by Ben White on Unsplash

பெரும்பாலானோருடைய கற்பனைகள் கொரோனா, ஊரடங்கு, ஈபாஸ் ஆகியவற்றைச் சுற்றிவந்தன. நான் புத்தகம், ஈபுத்தகம், திருட்டு PDFபற்றியெல்லாம் நிறைய எழுதிவருவதால், அது தொடர்பான சுவையான கமெண்ட்களும் இருந்தன. மக்களுடைய கற்பனைக் குதிரை எல்லாத் திசைகளிலும் பாய்ந்திருப்பது மகிழ்ச்சி. வந்த கமெண்ட்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றை இங்கு தொகுக்கிறேன்:

முதலில், அந்தப் பையன் கையில் உள்ளது அவனுடைய தந்தையின் டைரி என்று கற்பனை செய்துகொண்ட மூன்று கமெண்ட்கள்:

 1. K G Gouthaman

ஆ! அப்பாவோட பழைய டைரியைப் பார்த்தால்…. அப்பாவும் என்னைப்போலவே கணக்குல fail!

 1. Kannan Rajagopalan

அப்பா அம்மாவைப்பத்திக் கவிதை எழுதியிருக்கார் டைரில, ஒரு மண்ணும் புரியலை!

 1. Ganesan Ramakrishnan

டேய் தகப்பா!!! இந்த டைரில நீ எழுதியிருக்கிறது எல்லாம் அம்மாக்கு தெரியுமா??!! 😳

அடுத்து, புத்தகத்துக்குள் உள்ள மயிலிறகைக் கற்பனை செய்த மூன்று கமெண்ட்கள்:

 1. Immanuel Alance

ஆ! நான் வெச்ச மயிலிறகு இரட்டைக் குட்டி போட்டிருக்கு!

 1. Rimzan Amanullah

வாவ்! என் மயிலிறகு குட்டி போட்டிருக்கு!!

 1. Prabhu Balasubramaniam

புத்தகத்துக்குள்ள மயிலிறகு வெச்சா அந்த மயிலிறகு குட்டி போடுமா!

மூன்று நண்பர்கள் மந்திர ஜாலத்தைக் கற்பனை செய்திருந்தார்கள்:

 1. Rajesh Garga

இந்த மந்திரத்தைச் சொன்னா இளமை திரும்பும்ன்னாங்க. ஆனா இவ்வளவு சின்னப் பையனாவேன்னு எதிர்பார்க்கவே இல்லையே!

 1. Usha Venkat

என்னது…ஒரே புக்ல எல்லா சப்ஜெக்ட் பாடமும் மாஜிக் மாதிரி மாறி மாறி வருதே..!

 1. Vidhya Suresh

இத்தூண்டு புக்குக்குள்ளையா இவ்ளோ நாள் இருந்தேன்?. என்னை விடுவிச்சதுக்கு நன்றி அலாவுதீன்.

கொரோனாவை மையமாகக் கொண்ட கமெண்ட்களுள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று:

 1. Rajayogan Perumal

என்னது! 2020க்கு முன்னாடி மக்கள் மாஸ்க் போடாம வெளியில போவாங்களா?

குழந்தை மனநிலையை அழகாகக் காட்சிப்படுத்திய ஒன்று:

 1. Vaidyanathan

ஆஹா! maths மிஸ் ஸ்டார் போட்டிருக்காங்க!!!

நகைச்சுவையாக ஒன்று:

 1. Sivakumar Pon

புத்தகத்துல வெச்சிருந்த பத்து ரூபாயைக் காணோமே!

வருங்காலத் தலைமுறை புத்தகங்களை எப்படிப் பார்க்கும் என்பதைச் சுவையாகக் காட்சிப்படுத்திய இரண்டு:

 1. Priyadarshini RL

என்னது?! விரலை வெச்சு ஒவ்வொரு பக்கமாத் திருப்பி வாசிக்கணுமா?! விரல் வலிக்குமே! ஒரே ஒரு டச் செஞ்சதும் அதுவாவே திரும்பாதா?! எப்படிதான் இதையெல்லாம் வச்சுப் பல வருடங்கள் வாசிச்சுட்டுருந்தாங்களோ?!

 1. Sukumar Swaminathan

வாவ்வ்வ்..! சார்ஜ் போடாமலே வேலை செய்யுதே.. இந்த டிவைஸ் பேரென்ன?

அந்தப் பையன் கையில் உள்ள புத்தகத்தையே கண்டுகொள்ளாத இரண்டு சுவையான கமெண்ட்கள்:

 1. Brindha Sethu

ஒரு செகண்ட் கொட்டாவி விட முடியல; அதுக்குள்ள ஃபோட்டோ புடிச்சு, போட்டியும் அறிவிச்சிட்டாங்களே!!!

 1. Karpagambal Kannathasan

இப்படிப் போஸ் குடுத்தாத்தான் யாராவது நம்மை வைத்துப் புதுசா யோசிப்பாங்க

இந்தப் பதினாறு கமெண்ட்களில் ஒன்றைமட்டும் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தேன். ஆனால், இரண்டு கமெண்ட்கள் கிட்டத்தட்ட சம அளவு பிடித்திருப்பதால் அவை இரண்டையும் பரிசுக்குரியவையாக அறிவிக்கிறேன்:

 • Sukumar Swaminathan
 • Brindha Sethu

வாழ்த்துகள். கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு அமைவதைப் பொறுத்து இதுபோன்ற போட்டிகளைத் தொடர்வோம்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *