என்னுடைய Nonfiction பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஒருவருக்கு அச்சு இதழில் கட்டுரை எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறிய வாய்ப்புதான். ஆனால், சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் நல்ல தொடக்கமாக இருக்கக்கூடும். இதையொட்டி நான் அவருக்குச் சொன்ன சில சிறுகுறிப்புகள் இவை. எல்லாருக்கும் பயன்படும் என்று இங்கு வெளியிடுகிறேன்:
- அவர்கள் கேட்கும் அளவில் எழுதுங்கள். 500 சொற்கள் என்றால் எக்காரணம் கொண்டும் 500 சொற்களுக்குமேல் செல்லவேண்டாம்
- கட்டுரை சுருக்கமாக, சுவையாக இருக்கட்டும்
- உண்மையைமட்டும் எழுதுங்கள், உறுதிப்படுத்த இயலாத தகவல்கள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் விட்டுவிடுங்கள். எழுதுகிறவன் பொய்யைப் பரப்பலாகாது
- குழப்பமின்றிப் பொது வாசகர்களுக்குப் புரியும்படி எழுதுங்கள்
- இரண்டு, மூன்று முறை படித்துப் பார்த்துவிட்டு, திருத்திவிட்டு அனுப்புங்கள்
- சொன்ன நாளில் அனுப்பிவிடுங்கள், அரை நாள் தாமதம்கூடப் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். உங்கள் நற்பெயர் கெட்டுப்போகும்
- உங்கள் கட்டுரை படித்தவுடன் பிடிக்கும்படி அமைத்தால், உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்