பங்குச் சந்தைத் தளம் ஒன்றில் ‘Think like a farmer’ (விவசாயியைப்போல் சிந்தியுங்கள்) என்று ஒரு குறிப்பு வந்திருந்தது. விவசாயிக்கும் பங்குச் சந்தை முதலீட்டாளருக்கும் உள்ள ஒற்றுமைகள் அதில் விவரிக்கப்பட்டிருந்தன.
யோசித்துப்பார்த்தால், இந்தச் சிந்தனை முறை உலகத்தில் எல்லா வேலைகளுக்கும் பொருந்தும் என்று தோன்றுகிறது:
1. பயிர்களைப் பார்த்து எரிச்சலுடன் கத்திப் பயன் இல்லை
2. பயிர்கள் நீங்கள் நினைக்கும் வேகத்தில் வளரவில்லை என்று குற்றம் சாட்டிப் பயன் இல்லை
3. பயிர்கள் முழுக்க விளையுமுன் பிடுங்கினால் இழப்பு உங்களுக்குதான்
4. மண்ணுக்கேற்ற பயிரை விளைப்பதுதான் அறிவார்ந்த செயல்
5. அதன்பிறகு, பயிருக்கு ஒழுங்காக நீர் பாய்ச்சி உரம் போடவேண்டும்
6. களை எடுக்கவேண்டும்
7. சில பருவங்கள் நன்றாக இருக்கும், சில பருவங்கள் மோசமாக இருக்கும், அதுதான் வாழ்க்கை. வெயில், மழை, குளிர்… இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எல்லாவற்றுக்கும் தயாராக இருந்துகொண்டு முன்னேறவேண்டியதுதான்
பின்குறிப்பு: இந்தக் குறிப்பை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்தில் தேடிக் கண்டறிய முயன்றேன், பயன் இல்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.