இப்போதெல்லாம் அன்றாட நடைப்பயிற்சிக்குக்கூட வெளியில் செல்வதில்லை. வீட்டுக் கூடத்திலேயே ஊஞ்சலைச் சுற்றி ஒன்றரை மணி நேரம் நடந்தால் எட்டு கிலோமீட்டரை எட்டிவிடலாம், அப்புறமென்ன?

இதனால், சில சுவையான புதிய பொழுதுபோக்குகள் கிடைத்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அந்த ஊஞ்சலில் மாட்டப்பட்டிருக்கும் பழக்கூடையில் உள்ள பழங்களின் கனிதலைக் கூர்ந்து கவனிக்கமுடிகிறது, ஒரு வாழைப்பழம் பச்சையிலிருந்து மஞ்சளாகிக் கருக்கும் நுட்பத்தை நான் இப்போது அறிவேன். அடுத்த ஓரிரு நாட்கள் மாதுளம்பழத்தைக் கவனிக்கவுள்ளேன்.