நாம் சரியாகவும் பிறர் தவறாகவும் இருக்கிற நேரத்தில் அறச்சீற்றம் கொள்வது உடனடி மகிழ்ச்சியைத் தருகிறது, நான் பெரியவன் என்னும் ஈகோவுக்குத் தீனி போடுகிறது
அதே நேரத்தில் பொறுமை காப்பதும் பரிவைக் காண்பிப்பதும் பண்பையும் தொலைநோக்கில் பல கூடுதல் நன்மைகளையும் தருகின்றன. ஆனால் இது நமக்கு உடனடியாகப் புரிவதில்லை. பின்னர் புரிந்து பயன் இல்லை.