Be Real என்று ஓர் App உலக அளவில் புகழ் பெற்றுக்கொண்டிருக்கிறது, இதைக் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகிறார்களாம்.
இந்தச் செயலி என்ன செய்யும்?
நாள்தோறும் ஒருமுறை ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு Notification வருமாம், அடுத்த 2வது நிமிடம் நம் முகத்தையும் (முன் கேமரா) நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதையும் (பின் கேமரா) படம் பிடித்து இணையத்தில் போட்டுவிடுமாம்.
இதில் முக்கியமான விஷயம், அந்த Notification எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், எப்போது வந்தாலும் புகைப்படம் எடுக்கவேண்டும். நல்ல உடை உடுத்துதல், ஒப்பனை, தலை வாருதலுக்கெல்லாம் நேரம் இருக்காது, பொய் சொல்லமுடியாது, இருப்பதைச் சட்டென்று படம் பிடிக்கவேண்டும்.
சரி, ஆனால், இது எதற்கு?
மக்களுடைய உண்மை வாழ்க்கையைப் பாசாங்கில்லாமல் காட்சிப்படுத்தும் முயற்சி இது. Instagram போன்ற ‘அழகுபடுத்தப்பட்ட’ புகைப்படத் தொகுப்புகளுக்கு எதிராக இதை அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம்.
உண்மையில் திகிலூட்டும் முயற்சிதான்!