இன்று ஓர் அலுவலகக் கூட்டத்தில் ஒருவர் தன்னுடைய திட்டத்தைப்பற்றி நன்கு விரிவாகப் பேசி விளக்கினார். இன்னொருவர் அதற்கு நன்றி தெரிவிக்கும்வகையில், ‘Thanks for covering it up’ என்றார்.
உண்மையில் அவர் சொல்ல நினைத்தது ‘Thanks for covering it’ என்பதுதான். அதன் பொருள், ‘இந்தக் கூட்டத்தில் நீங்கள் இந்தத் திட்டத்தைப்பற்றிப் பேசியதற்கு நன்றி.’
ஆனால், அதைப் பேசும்போது, அவர் தன்னையும் அறியாமல் ‘up’ என்ற ஒரு சொல்லைச் சேர்த்துவிட்டார். அதனால், பொருள் எதிர்மறையாக மாறிவிட்டது. ‘Thanks for covering it up’ என்றால், ‘இந்த உண்மை யாருக்கும் தெரியாதபடி மூடி மறைத்ததற்கு நன்றி’ என்று பொருள்.
கட்டாயப் பின்குறிப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் அப்படிப் பேசியவரைக் கிண்டல் செய்வது இல்லை. நான், நீங்கள், நாம் எல்லாரும் இதுபோல் பிழை செய்கிறவர்கள்தான், கற்றுக்கொள்கிறவர்கள்தான். வாழ்வில் இதுபோன்ற இயல்பான நகைச்சுவைக் கணங்கள் வரும்போது மனம் விட்டுச் சிரிக்கப் பழகுவது நல்லது. தவறு செய்தவரைச் சுட்டிக்காட்டி இழிவுபடுத்திப் பேசிச் சிரித்தால்தான் தவறு. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்படவேண்டாம்.