தயிர் ஒரு சுவையான பண்டம். ஆனால், அதனுடன் எதைச் சேர்த்தாலும் அதன் சுவை சற்றுக் குறையத் தொடங்கிவிடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
உலகப் புகழ் பெற்றுவிட்ட தயிர்ச் சாதம்கூட, தொட்டுக்கொள்ளும் ஊறுகாயால்தான் தப்பிப் பிழைக்கிறது என்பது என் துணிபு. தயிர்வடைகூடக் கொஞ்சம் பரவாயில்லை. இந்தத் தயிர்ச் சேமியா, தயிர் அவலெல்லாம் ஏன் கண்டுபிடித்தார்கள் என்பது மானுட குலத்தின் விடையில்லா மர்மங்களில் ஒன்று.

வடக்கர்கள் தயிரில் சர்க்கரையைச் சேர்த்து லஸ்ஸி என்கிறார்கள், தயிர் வடையிலும் சர்க்கரையைப் போட்டுவிடுகிறார்கள். அதன்பிறகு, ஓமப்பொடி, உடைத்த பூரி, இன்னபிறவற்றைச் சேர்த்துத் தாஹி பாபட் என்றெல்லாம் ஏதேதோ முயன்றுபார்க்கிறார்கள். இவற்றில் எவையும் தனித்தயிர்ச் சுவைக்குமுன் நில்லாது. ரோஜர் ஃபெடரரை ஏன் 11 நபர் கிரிக்கெட் அணியில் சேர்க்கவேண்டும்?
தனித்தயிரைவிடச் சுவையான ஒரு பண்டம் உண்டென்றால், அது வங்காளர்களுடைய கொடையாகிய மிஷ்டி தோய். மற்ற அனைத்தும் போடா டோய்!
இணைப்பு: மிஷ்டி தோய்பற்றி 14 ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய கட்டுரை