Otto English எழுதிய “Fake History” என்ற புத்தகத்தைப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாம் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிற பல வரலாறுகள் வெறும் பழம்பெருமைகள், புரட்டுகள்தான் என்பதை மிக விளக்கமாக ஆராய்ந்து நிறுவும் புத்தகம் இது.
இதை எழுதியவர் ஐரோப்பியர் என்பதால் பெரும்பாலான எடுத்துக்காட்டுகள் இங்கிலாந்தைப்பற்றியவை, ஆங்காங்கு அமெரிக்க வரலாறும் (அல்லது புரட்டும்) வருகிறது. இந்தியா ஓரிரு வரிகளில்மட்டும்தான் தலை காட்டுகிறது.
ஆனால், இந்தியர்களாகிய நாம் இதைப் படித்தால் நம்மைச் சுற்றிப் பரப்பப்படும் பல பொய்களை உடனே அடையாளம் கண்டுகொள்வோம். அவை பொய் என்று தெரிந்தும் சிலர் பரப்புவது ஏன், அதைப் பலர் நம்புவது ஏன் என்பதற்கெல்லாம் விளக்கங்கள் இதில் உள்ளன.
ஆக, பொய் வரலாறு என்பது உள்ளூர்ச் சிக்கல் இல்லை, உலகச் சிக்கல். அதைத் தீர்ப்பதும் அதே அளவு பெரிய சிக்கல்.
நூலாசிரியர் பொய் வரலாற்றை அடையாளம் கண்டுகொண்டு நம்பாமலிருப்பது எப்படி என்று விளக்கத்தான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஆனால், வரலாற்றை எழுதுகிறவர்களுக்கும் இந்தச் சிக்கல் அவ்வப்போது வந்துவிடுகிறது என்பதால், எழுத்தாளர்களும் இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாகப் படிக்கவேண்டும்.
இந்த ஆண்டில் நான் படித்த மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்று. வலுவாகப் பரிந்துரைக்கிறேன்.
Otto English எழுதிய “Fake History” புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்பு இங்கே உள்ளது.



