உலகுக்கு அறிவித்தல்

இன்று மாலை நடையின்போது ஒரு காரைப் பார்த்தேன். அதன் பின் கண்ணாடியின் வழியாக ஐந்து கன்னடப் புத்தகங்கள் வரிசையாகத் தெரிந்தன.

கார்களின் பின் இருக்கைக்குப் பின்னால் புத்தகங்கள் கிடப்பது வழக்கம்தான். அந்த இருக்கைகளில் அமர்ந்து புத்தகம் படித்தவர்கள் இறங்குமுன் அங்கு வைத்துவிட்டு இறங்குவார்களாக இருக்கும்.

ஆனால், இந்தப் புத்தகங்கள் அப்படிக் ‘கிடக்கவில்லை’. ஒரேமாதிரி வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு புத்தகத்தின் முன் அட்டையும் தெளிவாகத் தெரிந்தது. புத்தகங்களுக்கு நடுவிலான இடைவெளிகூட Microsoft Powerpointல் உள்ள Align வசதியைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட ஓவியங்களைப்போல் மிக நேர்த்தியாக இருந்தது.

அதனால், காரைத் தாண்டிச் சென்றவன் திரும்பி வந்து அந்தப் புத்தகங்களை ஆவலுடன் பார்த்தேன். அனைத்தும் வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகங்கள். அனைத்தையும் ஒருவர்தான் எழுதியிருக்கிறார். இந்தக் காரும் அவருடையதாகத்தான் இருக்கவேண்டும். தன்னுடைய படைப்புகளை உலகுக்கு அழகுடன் அறிவிக்கிறார், ஃபேஸ்புக், டுவிட்டரில் என்னைப்போன்றோர் எங்களுடைய புத்தகங்களை Display Pictureஆக வைப்பதுபோல்தான்.

அந்தப் புத்தகங்களைப் படிக்கும் அளவுக்கு எனக்குக் கன்னட அறிவு இல்லை. ஆனால், அந்த எழுத்தாளரை ஒருபோதும் மறக்கமாட்டேன்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *