இன்று அலுவலக விழாவுக்காக வெளி அரங்கம் ஒன்றுக்குச் சென்றிருந்தோம். நல்ல கூட்டம். எல்லாரும் நீண்ட வரிசையில் நின்று ஒவ்வொருவராகப் பாதுகாப்புப் பரிசோதனைகளைச் செய்துகொண்டுதான் உள்ளே நுழைந்தோம்.
நேரம் ஆக ஆக, வரிசை நீண்டுகொண்டே சென்றது. மக்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
அப்போது, அங்கு ஒருவர் வந்தார், ‘backpack, handbag இல்லாதவங்கமட்டும் இந்தப் பக்கமா வாங்க’ என்று அழைத்தார்.
மறுகணம், வரிசையில் நின்றிருந்த 20% பேர் அவருக்குப் பின்னால் நடந்தார்கள். அவர்களை அவர் விரைவாகப் பரிசோதித்து உள்ளே அனுப்பிவிட்டார். முதுகிலும் தோளிலும் பை வைத்திருந்த நாங்கள் அவர்களை மிகுந்த பொறாமையுடன் பார்த்தோம்.
இதற்குதான் புத்தர் ‘Attachmentsஐக் குறையுங்கள்’ என்கிறார்.