“Finding Time & Energy to Read 10 Books Every Quarter” உரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள், அனைவருக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சியில் என்னைப் பேட்டி எடுத்த Shivam Jyotirmay என்ற இளைஞர் எனக்குப் பிடித்த புத்தகம், நான் மிகவும் விரும்பிப் படித்த புத்தகம் எது என்று கேட்டார். நான் ‘Harry Potter Series‘ என்றேன். ‘4முறை முழுக்கப் படித்திருக்கிறேன்’ என்று பெருமையுடன் சேர்த்துக்கொண்டேன்.
‘ஓ, நல்லது, நான் இப்போது 18வது முறை படித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார் அவர்.
ஹாரி பாட்டர் என்கிற பாத்திரம்/அதன் சூழல் கொஞ்சம் மிகையாக வணிகப்படுத்தப்பட்டுவிட்டாலும், அத்தனைக்கும் அடிப்படையாக அமைந்த அந்த ஏழு நூல்களும் Pure Gold. இந்தப் பயல் இன்னும் பல தலைமுறைகளுக்குப் படிக்கப்படுவான்!