இளையராஜா தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் அவர் எப்படிப்பட்ட பாடல்களை ரசிப்பார்/பாராட்டுவார் என்று நான்கு வரையறைகளைச் சொல்கிறார்:
1. பாடலைக் கேட்டவுடன் ‘அட, இதுபோல் நம்மால் இசையமைக்க முடியவில்லையே’ என்கிற திகைப்பைக் கொடுக்கவேண்டும்
அல்லது
2. இந்தப் பாடலில் நாம் கற்றுக்கொள்வதற்குப் பல விஷயங்கள் உள்ளனவே என்கிற மலைப்பைக் கொடுக்கவேண்டும்
அல்லது
3. அந்தப் பாடல் நம்மை வேறோர் உலகத்துக்குக் கொண்டுசெல்கிற பேரனுபவமாக இருக்கவேண்டும்
அல்லது
4. பல பிறவிகளாக அந்தப் பாடலுடன் நமக்குத் தொடர்பு இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கவேண்டும்
எல்லாக் கலைப் படைப்புகளுக்கும் பொருந்துகிற அழகான வரையறை.