புகழ் பெற்ற கனடிய எழுத்தாளர் மார்கரெட் அட்வுட், இளம் எழுத்தாளர்களுக்கு (குறிப்பாக 11 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு) வழங்கும் ஐந்து குறிப்புகள்:
- எப்போதும் கையில் ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுக்குத் தோன்றுகிற, பின்னால் பயன்படும் என்று நீங்கள் நம்புகிற விஷயங்களை உடனே குறித்துவைத்துக்கொள்ளுங்கள்
- நிறையப் படியுங்கள்; படிக்கிறவற்றை ஆராயுங்கள்: எனக்கு எது பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை? ஏன் பிடிக்கிறது? ஏன் பிடிக்கவில்லை? இதில் எந்தப் பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன? ஆசிரியர் எப்படி இந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார்? அவர் மொழியை எப்படிக் கையாள்கிறார்? இப்படிப் படிக்கிற அனைத்தையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்
- நீங்கள் அமர்ந்து எழுதும் நிலையைக் கவனியுங்கள்; எழுதும் செயல் உங்கள் உடலுக்கு மிகப்பெரிய பளுவை ஏற்றக்கூடியது; அது இளவயதில் தெரியாது, பின்னால்தான் தெரியும்; அதையெல்லாம் தவிர்க்கவேண்டுமென்றால், உடற்பயிற்சி செய்யுங்கள், தினமும் நடந்து பழகுங்கள்
- எழுதிக்கொண்டே இருக்கும்போது ஒரு தடை (block) ஏற்படுகிறது, அடுத்து என்ன செய்வது என்று புரியாவிட்டால், சிறிது தூரம் நடந்துவிட்டுத் திரும்புங்கள், அல்லது, தூங்கி எழுங்கள், பல நேரங்களில் இந்த இரண்டில் ஒன்று உங்கள் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டுவந்து கொடுத்துவிடும்
- எழுதும்போது, யார் என்ன நினைப்பார்களோ என்று எண்ணி எதையும் மாற்றாதீர்கள்; எழுதியபின், அது உங்களுக்கே பிடிக்காவிட்டால், எழுதியதைத் தூக்கி எறிய அஞ்சாதீர்கள்
(2018ல் National Centre for Writingக்கு மார்கரெட் அட்வுட் வழங்கிய ஒரு பேட்டியிலிருந்து)