நமக்குத் தேவையான Superskills

என்னுடைய கருத்தில், நமக்குத் தேவையான Superskills:

மாணவப் பருவத்தில், பணிவாழ்க்கையைத் தொடங்கும்போது:

1. உழைப்பு
2. ஆர்வம்/குறுகுறுப்பு
3. தன்னம்பிக்கை

பணிவாழ்க்கையின் நடு ஆண்டுகளில் (முன்னேறும் நேரம்):

4. பிறரிடம் நம்மைப்பற்றிக் கருத்து கேட்பது, பிழைகளைத் திருத்திக்கொள்வது
5. புதியவற்றைத் திறந்த மனத்துடன் முயன்றுபார்ப்பது
6. எதையும் பிறருடைய கோணத்திலிருந்தும் பார்க்கப் பழகுதல்

உயர்நிலைகளுக்கு வளரும் நேரம்:

7. மனத்துக்குள் சிக்கலான படங்களை வரைந்துகொள்ளும் திறன்
8. அந்தச் சிக்கலான விஷயங்களைப் பிறருக்குச் சுருங்கச்சொல்லல்
9. பிறரை வளர்த்துவிடும் அக்கறை

எப்போதும்:

10. நேர்மை
11. விரைவாகக் கற்கும் திறன்/மறக்கும் திறன்
12. நானும் பிழையுள்ள மனிதன்தான் என்னும் தெளிவு, பணிவு
13. தன்னை எடைபோடல்/திட்டமிடல்
14. நிதி அறிவு

Image by Gerd Altmann from Pixabay

இவற்றுடன் கடவுள் பக்தி, படிக்கும் ஆர்வம், எழுத்துத் திறன், பொறாமையின்மை, சாதி/மத/இன/மொழி/பாலின/பொருளாதார அடிப்படையில் யாரையும் இழிவாகக் கருதாமலிருத்தல் ஆகியவையும் முக்கியம் என்று கருதுகிறேன். ஆனால் அவை இந்தப் பட்டியலின் அமைப்பில் பொருந்தவில்லை.

உங்கள் பட்டியலைச் சொல்லுங்கள்.

About the author

என். சொக்கன்

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *