கை, கால், கண் போன்றவற்றைப் புறவுறுப்புகளாகவும் இரைப்பை, இதயம், நுரையீரல் போன்றவற்றை அகவுறுப்புகளாகவும் நாம் பொதுவாக அறிந்திருக்கிறோம். அதாவது, கண்ணால் பார்க்கக்கூடியவை வெளியுறுப்பு, மற்றவை உள்ளுறுப்பு.
திருவள்ளுவர் அன்பை “அகத்துறுப்பு” (அகத்து உறுப்பு) என்கிறார். (திருக்குறள் 79).
அன்பைப் பொழியும் உள்ளத்தைத்தான் அகத்துறுப்பாகச் சொல்கிறாரா? ஒருவேளை, அன்பே நமக்குள் ஓர் உறுப்பாக இருந்து செயல்படவேண்டுமோ! உணர்வாகமட்டும் நாம் எண்ணுகிற அன்பை ஓர் உறுப்பாக நினைக்கிற இந்தக் கற்பனை அழகாக இருக்கிறது.